வெள்ளி, 18 செப்டம்பர், 2009

நலம் தரும் பழங்கள்

பழங்களில் இரும்பு சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் போன்ற "அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், பல வகையான வைட்டமின்களும் உள்ளன. பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.

1. ஆப்பிள் - ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை, நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். ஆப்பிள் ஜுஸ் குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கை குணமாக்கும்.
2. ஆரஞ்சு - எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடலாம். ரஞ்சு உடலுக்கு புத்துணர்ச்சியும் வலுவும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
3. திராட்சை - சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணமாக்கும் . ஒரு "வுன்ஸ் திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர சிறு நீர் தாரைகளில் உண்டாகும் கல் கரைந்துவிடும்.
4. மாதுளை - இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு நல்லது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி நிறைய உள்ளது.
5. அன்னாசி - "அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த பயன் படுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
6. சப்போட்டா - இரும்பு, பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துக்கள் அதிகம் உள்ளது. சப்போட்டாவுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். 7. பப்பாளி - பப்பாளி பழத்தை துண்டுகள் ஆக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் "ஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கிவிடும். தாய்ப்பால் சுரக்க பப்பாளி பயன்படும்.
Reade more >>

நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?

பூமிப் பந்தின் மையப்பகுதி (core) இன்னும் சூடாகவும், கொதிக்கும் குழம்பாகவும்தான் உள்ளது. இந்த மையப்பகுதிக்கு மேலாக mantle எனப்படும் பகுதி உள்ளது. அதற்கும் மேலாக crust எனப்படும் மேலோடு உள்ளது. ஆமையில் முதுகில் உள்ள ஓடு மாதிரி இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்களேன்!

இந்த மேலோடு நல்ல விளாம்பழத்தின் ஓடு மாதிரி மொழுமொழு என்று ஸ்மூத் ஆக இருக்காது. சில இடங்களில் பிளந்து, விண்டுபோன ஓடுகளாக இருக்கும். அங்குதான் பிரச்னையே ஆரம்பமாகிறது.

மேலே உள்ள படத்தில் கறுப்புக் கோடுகள் காணப்படும் இடங்களில்தான் இரண்டு பிளேட்கள் அல்லது ஓட்டாஞ்சில்லுகள் ஒன்றை ஒன்று மோதி உரசுகின்றன. தினம் தினம் இவை நங் நங் என்று மோதிக்கொள்ளா. ஆனால் பலவேறு காரணங்களால் இந்த ஓட்டாஞ்சில்லுகள் ஒன்றை ஒன்றை நசுக்கித் தள்ள முயற்சி செய்யும். அடிப்பகுதியில் பீறிட்டு எழ முயற்சி செய்யும் கொதிக்கும் குழம்பு ஒரு காரணம். இதன் விளைவாக அந்த கறுப்புக் கோட்டுப் பகுதிகளில் எப்போதும் அழுத்தம் அதிகமாக இருக்கும்.
அதை நீங்கள் கவனித்தால், ஒரு கோடு அந்தமான், இந்தோனேசியா பக்கமாகப் போகும். அதே கோடு ஜப்பானை உரசிக்கொண்டு போவதையும் பார்க்கலாம். இதே கோடுதான் பங்களாதேசம் வழியாக இமயமலை மேலே ஏறி மீண்டும் குஜராத் வழியாக அரபுக் கடலில் இறங்குவதைப் பார்க்கலாம். இதனால்தான் இந்தப் பகுதிகள் சீஸ்மிக் இயக்கம் அதிகமாக இருக்கும் பகுதிகள் எனப்படும். கடந்த இருபது ஆண்டுகளில் குஜராத், மஹாராஷ்டிரா பகுதிகளில் நடந்துள்ள நில நடுக்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். 2004-ல் இந்தோனேசியா, அந்தமான் நிலநடுக்கமும் அதனால் ஏற்பட்ட சுனாமியும் உங்களுக்கு நன்றாகவே நினைவில் இருக்கும்.
நில நடுக்கம் என்பது எப்படி ஏற்படுகிறது? இரண்டு சில்லுகள் ஒன்றுக்கு ஒன்று பக்கவாட்டில் காகிதம் கிழிவதுபோல நகரலாம். அல்லது, ஒன்று ஒன்றைக் கீழே அழுத்திவிட்டு மேலே போகலாம்.
இந்தக் கிழிசல் அல்லது நகர்தல் நடக்கும் பகுதி எபிசெண்டர் (நடுக்க மையம்) எனப்படும். இந்த நடுக்க மையம் பூமியின் மேல்பரப்புக்கு வெகு அருகில் இருந்தால், அதிர்ச்சி பலமானதாக இருக்கும். ஆழத்தில் இருந்தால், அதிர்ச்சி அவ்வளவாக இருக்காது. நடுக்க மையம் கடலுக்கு அடியில் இருந்து, அதனால் ஒரு சில்லு இன்னொரு சில்லை அழுத்திவிட்டு மேலே எழுந்தால் நிகழ்வதுதான் சுனாமி. பல கிலோமீட்டர் நீளத்துக்கு, ஒரு சில்லு ஒரு மீட்டர் உயரத்துக்கு எழுகிறது என்றால், எந்த அளவுக்கு கடல் நீரை நகர்த்தும் என்று பாருங்கள். அத்தனை கடல் நீரும் உயர எழும்பி கரையை நோக்கிப் பாயும்போதுதான் ஆழிப் பேரலை என்ற நிகழ்வு நடைபெறும்.
நிலம் அதிரும்போது அதன் அதிர்ச்சியைக் கணக்கிட ரிக்டர் அளவுகோல் என்பதைப் பயன்படுத்துவார்கள். நிலம் அதிரும் என்று நாம் சொல்லும்போதே ஒருவித அலைகள் பரவுவதாக நம் சொல்கிறோம் என்று புரிந்துகொள்ளவேண்டும். இரண்டு சில்லுகள் ஒன்றோடு ஒன்று மோதினால், மோதிய வேகத்தில் இரண்டும் எதிர்த் திசையில் பின்வாங்கும். பின் இரண்டும் மீண்டும் ஒன்றை ஒன்று நெருங்கு மோதும். இப்படி மோதிக்கொண்டே இருக்கும் இரு சில்லுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மோதல் வீச்சில் குறைந்து (amplitude attenuation) அமைதியாகும். அப்படி அவை மீண்டும் மீண்டும் மோதும்போது நில அதிர்வலைகள் உருவாகும் அல்லவா? அவற்றை நுட்பமான கருவிகள் கொண்டு அளக்கலாம். அந்தக் கருவியில் பதிவாகும் அதிர்வலைகளின் வீச்சைக் கொண்டு, நில நடுக்கம் எவ்வளவு மோசமானது என்று தெரிந்துகொள்ளலாம்.
இந்த ரிக்டர் அளவு என்பது லாகரிதமிக் அளவுகோலில் வருவது. அதாவது ரிக்டர் அளவு 6 என்பது ரிக்டர் அளவு 5-ஐப்போல பத்து மடங்கு பெரியது. ரிக்டர் அளவு 7 என்பது ரிக்டர் அளவு 6-ஐப்போல பத்து மடங்கு பெரியது; 5-ஐப்போல 100 மடங்கு பெரியது. மாபெரும் சுனாமி 2004 நேரத்தில் நடந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 9-ஐத் தாண்டியது. எனவே மிகக் கோரமானது. திங்கள் அன்று நடந்த நிலநடுக்கம் சுமார் 6.5 என்ற ரிக்டர் அளவு. அதாவது 2004 நில நடுக்கத்தைப் போல சுமாராக ஆயிரத்தில் ஒரு பங்குதான். எனவேதான் உயிர்ச்சேதம், பொருள் சேதம் இன்றித் தப்பித்துள்ளோம்.
நிலநடுக்கம் என்பதைத் தடுக்கமுடியாது. எப்போது வரும் என்பதைக் கணிப்பதும் கடினம். நாம் நிலநடுக்கப் பகுதியில் எங்கு இருக்கிறோம் என்பதைப் பொருத்து, சரியான கட்டுமானங்களைக் கட்டி, சுனாமியிலிருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்யவேண்டுமோ அதனைச் செய்துகொள்ளவேண்டும். அவ்வளவுதான் மனிதனால் செய்யமுடிந்தது.
Reade more >>

பாப்பளி் பழம்

பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. வைட்டமின் ,போலிக்அமிலம்,பொட்டசியம்,காப்பர்,பாஸ்பரஸ்,இரும்பு,நார்ச்த்துக்கள் உள்ளன.
பப்பாளி குடல்புழுக்களுண்டாவதையும் தடுக்கிறது. மலச்சிக்கல், வயிற்றுபோக்கு,வாய்வு,நெஞ்சு எரிச்சல்,அல்சர்,சர்க்கரை வியாதி,கண் பார்வை கோளாறுக்கும் பப்பாளி ஒரு சிறந்த மருந்து.
முகம் பள பளக்க: முரடான முகத்தை மென்மையாக்கும் சக்தி பப்பாளி தோலுக்கு உண்டு பழுத்த பப்பாளி விழுது, நான்கு ஸ்பூன் தேன், சிறிது க்ளிசரைன் சேர்த்து, கண்ணைச் சுற்றின பகுதி தவிர மீதி இடங்களுக்கு பேக் போடவும். பதினைந்து நிமிஷம் கழித்த பிறகு அலசவும். முகம் மினுமினுக்கும்.
பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வையுங்கள். அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக்கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறி விடும்
மேனி மினுமினுக்க: ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு , சிறிது சீனி கலந்து 30 நாள் காலை சாப்பிடவும்.
காலில் பித்த வெடிப்பா?
பப்பாளியின் காயின் பால் எடுத்து தேய்க்கவும். வெடிப்பு காணமல் போகும்.
மெல்லிடை வேண்டுமா?
உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து சாப்பிடலாம்.
Reade more >>

வியாழன், 17 செப்டம்பர், 2009

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.


உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.


அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.


சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.


பானங்கள் (200 மி.லி அளவு):


* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.


* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..


* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..


* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.


* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.


* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.


* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.


எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.


உணவு வகைகள்


உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):


* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.


* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.


* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.


* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.


* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..


* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.


* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.


* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.


* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.


* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.


* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.


பழங்கள் (100 கிராம்)


* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..


* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.


* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..


* மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.


* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.


* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.


Thanks
Reade more >>

உங்கள் சருமத்தை அழகாக்கும் உணவுகள்

  • சிலருக்கு செயற்கையான கீரீம் பயன்படுத்தி உடல் அழகாக்க பிடிக்காது அவங்களுக்கு இதோ சில உணவுகள் மூலமே அழகாக்க சில உணவு குறிப்புகள்
    உடலின் வெளி அழகுக்கும், உள் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் கீரை எல்லா வைகயான கீரையும் அதிகம் சாப்பிடலாம். குறிப்பாக வெந்தயக்கீரை, பசலைக்கீரை,முருங்கை கீரைகளில் அதிகமாக இரும்பு சத்து மற்றும் ஜிங்க் சத்து இருக்கு. இந்த கீரைகளுடன் விட்டமீன் சி சத்துள்ள உணவுகள் சேர்த்தும் சாப்பிடும் பொழுது இன்னும் அதிகமான சத்துக்கள் கிடைக்கும் இதன் மூலம் கண்களுக்கு கருவளையம் குறையும், முகத்தில் பருக்கள் வருவது குறையும்.
    வருண்ட சருமம் உள்ளவர்கள்:
    அதிக வருண்ட சருமம் உள்ளவர்கள் உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் (உடல் நலனுக்கு ஏற்ப) உணவில் சேர்த்துக்கொள்ளவும், ஆலீவ் ஆயீல், எள் எண்ணெய், கடலை எண்ணெய், நெய் போன்றவைகளை உணவில் சேர்த்துக்கொள்ளவும்.
    தக்காளி:
    ஆண்டி ஆகிஸிடெண்ட்களான விட்டமின் ஏ மற்றும் விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த பழம். விட்டமின் சி தோலுக்கு எலாஸ்டிக் தன்மை தருகிறது. சருமம் கறுப்பதும் தடுக்கும்.
    இளமையில் முதுமை:
    இளமையிலே சிலருக்கு முதுமையான தோற்றம் இருக்கும் அவங்க ஒரு கைபிடியளவு ஸ்ட்ராபெர்ரி அல்லது 3 நெல்லிக்காய் சாப்பிடவும். தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
    மீன்:
    மீனிலுள்ள ஓமேகா-3 என்ற பொருள் சரும சொல்களை புதுபிக்கும். சருமத்தை பளபளக்க செய்யும். வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.
    முகப்பருக்களை தடுக்க:
    சோயபீன்ஸ்யில் இருக்கும் ஈஸ்ட்ரோஜன் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. வாரத்துக்கு 3 நாள் இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப் பொலிவுடனும், ஈரபசையுடனும் இருக்கும்.
    கேரட்:
    இதிலுள்ள பீட்டா க்ரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, ஆப்ரிகாட், பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.
    டல் லடிக்கும் முகம்:
    சிலருக்கு முகத்தில் பரு இல்லாமல் சுத்தமாக இருக்கும் இருந்தாலும் ஏதோ முகத்தில் டல்லாக தெரியும். அவங்க அதிகமாக தண்ணீர் குடிக்கனும். அப்பொழுது தான் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரபசையுடன் இருக்கும்.. குறைந்தது ஒரு நாளுக்கு 9 கப் தண்ணீர் குடித்தால் முகம் நன்றாக இருக்கும்.
    அழகு குறிப்புகள் புத்தகத்தில் இருந்து எடுத்த தகவல்
  • நன்றி ப்யூட்டி கார்னர்
Reade more >>

படித்ததில் பிடித்தது

ஆரோக்கிய உணவுகள்

பாதாம் பருப்பு
கண் பார்வையைத் தெளிவு படுத்தும், உடலில் புண்னிருந்தால் ஆற்றும், ஆண் பெண் இன்பத்தை அதிகரிக்கச் செய்யும், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும், தாதுவை பெருக்கும்.
பாகற்காய்
பித்த சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும். மலத்தை இளக்கி வெளியேற்றும். நோய்க் கிருமிகளை அழிக்கும். இரத்தத்திரலுள்ள சர்க்கரையைக் குறைக்கும்.
இஞ்சி
ஒரு துண்டு இஞ்சியை எடுத்து தோல் நீக்கிட்டு நசுக்கி, சாறு எடுத்து சட்டில ஒரு ஸ்பூன் சர்க்கரையை போட்டு வறுத்து சர்க்கரை சிவந்ததும் இஞ்சிச் சாறை விடணும். சர்க்கரை முதல்ல கெட்டியாகி அப்புறம் கரைஞ்சதும் அடுப்புலருந்து இறக்கி, அரை டம்ளர் பால் சேர்த்து குடிக்கணும்.
எலுமிச்சைப் பழம்
வாந்தியை நிறுத்தும், களைப்பைப் போக்கும், பித்த சம்பந்தமான கோளாறுகளைப் போக்கும், தாகத்தை தணிக்கும். வாய்வுக் கோளாறுகளைப் போக்கும். அளவு மீறிய வயிற்றுப் போக்கை நிறுத்தும், இருமலைக் குணப்படுத்தும். மலச்சிக்கலைப் போக்கும், வயிற்று வலியைப் போக்கும்
வெந்தயம்
உடல் உஷ்ணத்தைத் தணித்து உடலை சமநிலையில் வைக்கும். ரத்த பிரமேகம் என்ற நோயைக் குணப்படுத்தும். காச நோயைக் குணப்படுத்தும். சீத பேதியைக்கூட நிறுத்தும் தாதுவை விருத்தி செய்யும்
வெந்தயக் கீரை
வெந்தயக் கீரையை பருப்புடன் சேர்த்து தினசரி சமைத்து சாப்பிட்டு வந்தால் காச நோய் குணமாகும். வயிற்று உப்பிசத்தை அடக்கி விடும். வாதசம்பந்தமான கோளாறுகள் குணமாகும். ஆனால் பசியை மட்டும் படுத்திவிடும். இரும்புச் சத்து மிகுந்தது
பெருங்காயம்
மலக் கிருமிகளை வெளியேற்றி விடும். கபத்தை உடைத்து வெளியேற்றும். வாத சம்பந்தமான வியாதிகளைத் தணிக்கும். விஷப் பூச்சிகளின் விஷத்தை முறித்துவிடும். மூலரோகத்தை படிப்படியாகக் குணப்படுத்தும். வாயுவை நீக்கும்
Reade more >>

uorology

சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை
ச. அன்பழகன்,
தஞ்சை நலம் மருத்துவமனை, தஞ்சாவூர்

சிறுநீர்க்கல்

பெயர் விளக்கம் : சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீரகம் என்ற தமிழ்ச்சொல் பொதுவாக மூத்திரக்காய் (Kidney), வடிகுழாய் (Ureter), சிறுநீர்ப்பை (Bladder) ஆகிய அனைத்து உறுப்புகளையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும். ஆனால் வழக்கில் சிறுநீரகம் என்ற சொல் மூத்திரக்காயை மட்டும் குறிப்பதாகப் பயன்படுவதால் இங்கு சிறுநீர்க்கல் என்ற சொல் Renal Calculi என்ற ஆங்சிலச் சொல்லுக்கு இணையாகப் பயன்படுத்தப்படுகிறது.

சிறுநீர்க்கல் எவ்வாறு உருவாகிறது?

சிறுநீர்க்கற்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் பல இருப்பினும் அவற்றுள் முதன்மையான கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் ஆகியவை பொதுவாக சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறுகின்றன. ஆனால் சிலரின் சிறுநீரில் இந்தக் கழிவுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரைவதில்லை. கரையாத கழிவுகள் சிறுநீர் உறுப்புகளில் படிகங்களாகத் தங்கி. பின்பு படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக உருவாகின்றன. மூத்திரக்காய், வடிகுழாய், சிறுநீர்ப்பை என எந்த இடத்திலும் கற்கள் உருவாகலாம்.

வடிவமும், அளவும் : கற்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுவதால் பல கூர்முனைகளைக் கொண்டுள்ளன்.

கல்லின் வரலாறு :

1. மனித உடலில் சிறுநீர்க்கல் எப்பொழுது உருவாகத் தொடங்கியது என்ற ஆராய்ச்சிகளில் மிகவும் தொன்மை( ! ) வாய்ந்த ஆதாரமாகக் கருதப்படுவது கி.மு. 4800 காலத்திய எகிப்து நாட்டின் மம்மியில் இருந்து பெறப்பட்டதுதான்.

2. சுஷ்ருதா என்ற இந்திய மருத்துவர் கி.மு.12ஆம் நூற்றாண்டில் அறுவை சிகிச்சை செய்து கல்லை நீக்கியதாக மருத்துவ இலக்கியங்களில் காணப்படுகிறது.

3. கி.பி.1879-ல் ஹெய்னிகி என்ற மருத்துவர் கல்லுக்கான அறுவை சிகிச்சை செய்தார்.

4. கி.பி.1800 களில் ஹோமியோபதி மருத்துவம் பயன்பாட்டுக்கு வந்தது. இன்று சிறுநீர்க்கல் சிகிச்சையில் பயன்படும் மருந்துகள் யாவும் அன்றே பயன்பாட்டில் இருந்தன.

5. PCNL எனப்படும் Percutaneous Nephrolithotomy எனப்படும் என்டோஸ்கோப்பி முறை 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. தற்போது பெருமளவு நடைமுறையிலுள்ள ESWL எனப்படும் Extracorporeal Shock Wave Lithotripsy முறை 1980-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.

சிறுநீர்க்கல் கணக்கெடுப்பு :

மொத்த மக்கள் தொகையில் 12% பேர் தங்களது வாழ்நாளில் ஏதோவொரு கட்டத்தில் சிறுநீர்க்கல்லால் பாதிக்கப்படுகின்றனர்.

12% ஆண்களும், 5% பெண்களும் தங்களது 70-வது வயதில் சிறுநீர்க்கல் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

சிறுநீர்க்கல் நோயாளிகளில் 50% பேருக்கு 5 முதல் 10 வருடங்களில் திரும்பவும் கல் உருவாகிறது.

பெரும்பான்மையான கல் நோயாளிகள் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் 50 வயதிற்குமேல் கற்களால் பாதிக்கப்படுபவர்கள் குறைவே.

மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் 1000 நோயாளிகளில் 7லிருந்து 10 பேர் சிறுநீர்க்கல்
நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியாவில் சுமார் 70 லட்சம் சிறுநீர்க்கல் நோயாளிகள் உள்ளனர். மொத்த மக்கள் தொகையில் ஆயிரத்துக்கு ஒருவர் கல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.

மூத்திரக்காயின் (Kidney) பணியும் கற்களும் :

மனிதனின் வயிற்றின் பின் பகுதியில் தண்டுவடத்தின் இரு பக்கங்களிலும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு மூத்திரக்காய்கள் அமைந்துள்ளன. அவரை வடிவில் உள்ள இந்த மூத்திரக்காய்கள் இரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களைப் பிரித்து சிறுநீராக மாற்றுகின்றன. இந்தப் பணியை மூத்திக்காயின் இயங்கு பகுதியான நெப்ரான்கள் செய்கின்றன. ஒரு நாளைக்கு சுமார் 180 லிட்டர் இரத்தம் நெப்ரான்களைக் கடந்து செல்கின்றன.

கற்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதை ஏற்கனவே கண்டோம். அவ்வாறு உண்டாகும் கற்கள் மூத்திரக்காயிலேயே தங்கிவிடலாம் அல்லது அங்கிருந்து நகர்ந்து சென்று வடிகுழாயிலோ, சிறுநீர்ப்பையிலோ தங்கிவிடுவதும் உண்டு. அவ்வாறு தங்கியிருக்கும் கற்கள் எவ்வித அறிகுறியும் இல்லாமல் ஒரே இடத்தில் பலவருடங்கள் கூட இருப்பதுண்டு. பல நேரங்களில் கற்கள் தங்கியிருக்கும் இடத்திலிருந்து இரத்தப்போக்கும், அந்தப் பகுதியைச் சுற்றி சீழ்பிடிப்பதும் நிகழ்கிறது. இதனை சிறுநீரிலிருந்து நேரடியாகவோ, பகுப்பாய்வு செய்வதோ அறியலாம் 2மி.மீ முதல் 5 மி.மீ வரை பருமனுள்ள கற்கள் தானாகவே சிறுநீருடன் வெளியேறிவிட வாய்ப்புண்டு.

சிறுநீர்க்கல்லின் அறிகறிகள் : மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலோ இருக்கும் கற்கள் சிறுநீர் வழியை அடைக்காதிருக்கும் வரை கற்களுக்கான அறிகுறிகள் வெளிப்படுவதில்லை. சாதாரணமாக கற்களின் இருப்பு கீழ்காணும் காரணங்களால் வெளிப்படுகினறது.

வழக்கமான முழு உடல் பரிசோதனை.
முதுகில் மந்தமான தொடர்வலி.
சிறுநீர்ப்பாதை அழற்சி.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
சிறுநீர் கழிக்கையில் வலி அல்லது எரிச்சல் அல்லது இரண்டும்.
சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்.
சிறுநீர்க்கல்லுக்கே உரித்தான தீவிரவலி, வலியின் தன்மை பிரசவ வலிக்கு ஒப்பாக இருக்கும். வலி முதுகிலிருந்து இடுப்புக்கு பரவும், வலியுடன் குமட்டல், வாந்தி, வயிறு உப்பிசம் ஆகியவை காணப்படும்.

சிறுநீர்க்கல் வலியானது கற்கள் இருக்கும் இடம், நிலை ஆகியவற்றைப் பொறுத்து ஆளுக்கு ஆள் மாறுபடும் கல்லின் பருமனுக்கும் வலியின் கடுமைக்கும் சம்பந்தமில்லை.

ஆய்வக சோதனையில் சிறுநீரில் படிகங்களும், இரத்த அணுக்களும், சீழும் காணப்படும்.

X-Ray, KUB, Scan மூலம் கற்கள் இருக்கும் இடத்தையும், கற்களின் பருமனையும் அறிய முடியும்.

எச்சரிக்கை : சிறுநீர்க்கற்கள் மூத்திரக்காயில் நீண்ட காலம் தங்கியிருந்து அதனை சீழ் பிடிக்கச் செய்து செயலிழக்கச் செய்யும் அபாயமும் உண்டு.

ஹோமியோபதி பார்வையில் கற்களும் சிகிச்சையும்

ஹோமியயோபதி பார்வையில் உருவாகும் கேள்விகள் :

1. ஆயிரம் பேரில் பத்து பேருக்கு மட்டும் ஏன் கற்கள் உருவாகின்றன?

2. ஒரே வகையான சுற்றுச்சூழல், ஒரே மாதிரியான குடிநீர், ஒரே வகையான உணவுப்பழக்கம் உள்ளவர்களில் ஒரு சிலருக்கு மட்டும் கற்கள் உருவாவதேன்?

3. ஒரே குடும்பத்தில் பலர் இருந்தும் ஒருவருக்கு மட்டும் ஏன் கற்களின் பாதிப்பு?
இந்தக் கேள்விகள் ஹோமியோபதியில் அடிப்படையானவை.

மனிதனின் உயிராற்றல் (Vital Power) மாறுபாடு அடையும்போது மனம் உடல் இயக்கங்கள் மாறுபாடு அடைகின்றன. இந்த மாறுபாடுகளே நோய்க்குறிகளாக வெளிப்படுகின்றன. உயிராற்றல் பலமிழந்துள்ள மனிதர்களை மட்டுமே நோய்கள் தாக்குகின்றன. எல்லா நோய்களும்
( சிறுநீர்க்கல் உட்பட) எல்லோரையும் தாக்குவதில்லை. எனவேதான் ஹோமியோபதி நோயுற்ற மனிதனை உற்று நோக்குகிறது. ஏன் இவரை இந்த நோய் தாக்கியிருக்கிறது என்று ஆராய்கிறது.

சிகிச்சை முறை : “உயிராற்றல் சரிசெய்யப்பட்டால் உடல், மன இயக்கங்கள் சீரடைகின்றன. உடல் பழைய நிலைக்கு அதாவது ஆரோக்கிய நிலைக்கு திரும்பி தானாகவே தன்னை அண்டியிருக்கும் நோய்களை விரட்டியடிக்கிறது”

ஹோமியோபதி மருந்துகள் உயிராற்றலை மேம்படுத்துகின்றன. அதன் மூலம் உடல் நலத்தை மீட்டுத்தருகின்றன. இது எல்லா நோயுற்ற மனிதருக்கும் பொருந்தும். சிறுநீர்க்கற்கள் இதற்கு விதிவிலக்கல்ல.

எவ்வித அறிகுறியும் இல்லாமல், எக்ஸ்-ரே, ஸ்கேன் பரிசோதனை மூலம் அறியப்பட்ட கற்களை வெளியேற்றுவதற்கான சிகிச்சையும், கற்களின் வலியுடன் மருத்துவரிடம் வரும் நோயாளிக்கு அளிக்கப்படும் சிகிச்சையும் வெவ்வேறு வகையில் அமையும். அதாவது,

1. வேறு காரணங்களுக்காக ஒரு நோயாளி மருத்துவப் பரிசோதனை செய்து கொள்ளும்போது தற்செயலாக அவருக்கு தற்கள் இருப்பது தெரியவந்து, அத்தகைய நோயாளி ஹோமியோபதி மருத்துவரிடம் வந்தால், அவரிடம் அவருடைய உடல்நிலை பற்றிய அனைத்து விபரங்களும் கேட்டறியப்படுகிறது. சிறுநீர்க்கல் மட்டுமல்லாது அவர் உடலில் உள்ள அனைத்து கோளாறுகளையும் கேட்டறிந்து, ஒட்டு மொத்த குறிகளின் அடிப்படையில் மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதன் மூலம் அவருடைய உயிராற்றல் தூண்டப்படுகிறது அல்லது மேம்படுத்தப்படுகிறது. சீர் செய்யப்பட்ட உயிராற்றல் உடலின் இயக்கங்களை சீர் செய்கிறது. உடல் இயக்கங்கள் சீரடையும் போது அனைத்து நோய்க் குறிகளும் உடலிலிருந்து விரட்டியடிக்கப்படுகின்றன. பின்பு கற்களுக்கு மட்டும் அங்கென்ன வேலை? அதுவும் உடலை விட்டு வெளியேறும்.

2. சிறுநீர்க்கற்களின் தீவிர வலியுடன் வரும் நோயாளியைப் பொருத்தவரை, அவருக்குள்ள வலி ஆரோக்கியத்தின் அடையாளமாகவே கருதப்படுகிறது. அதாவது சிறுநீர்ப்பாதையை அடைத்துக் கொண்டிருக்கும் கற்களை வெளியேற்ற உடல் முயற்சிக்கிறது. அந்த முயற்சியின் விளைவாக கற்கள் சிறுநீர்பாதையில் நகரும்பொழுது அதன் கூர்முனைகள் மூத்திரக்காயிலோ, வடிகுழாயிலே உரசும்போது கடுமையான வலி உண்டாகிறது. இந்நிலையில் அவருக்குள்ள வலியின் தன்மை, சிறுநீர்கழிக்கும் முறை அவருடைய அப்போதைய மனநிலை பிறகுறிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்பட்டு, அதன் அடிப்படையில் மருந்துகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கொடுக்கப்படுகிறது. உடல் முழு பலத்துடன் கற்களை வெளியேற்ற மருந்துகள் உதவுகின்றன. மேலும் வலியின் அதியுணர்ச்சியையும் மட்டுப்படுத்தி நோயாளியை அமைதிப்படுத்துகின்றன. “கற்கள் சத்தமில்லாமல் வெளியேறுகின்றன”.

ஹோமியோபதி மருந்துகள் : சிறுநீர்க்கற்களின் வலியை நீக்கவும், கற்களை வெளியேற்றவும், ஹோமியோபதியில் கீழ்காணும் மருந்துகள் பயன்படுகின்றன.

அர்ஜென்டம் நைட்ரிகம்,கல்கேரியா கார்பானிகா,லாச்சஸிஸ்,போடோபில்லம்,
டெரிபிந்தினா, பெல்லடோனா,சைனா,லைகோபோடியம்,பல்சட்டில்லா,
அர்டிகா யூரேன்ஸ்,பெர்பெரிஸ் வல்காரிஸ்.கோலோசிந்திஸ்,மெர்குரியஸ்,
சர்சபரில்லா,விராட்ரம் விரைடி, பிரையோனியா,டயஸ்கோரியா,நக்ஸ்வாமிகா,
செபியா,காந்தாரிஸ், ஹைட்ராஞ்ஜியா,நைட்ரிக்ஆசிட்,சாலிடாகோ,சாமோமில்லா,
ஹைடிராஸ்டிஸ், ஒசிமம் கானம்,டபாகம்.

ஒவ்வொருவரின் தனித்தன்மை, உடல்வாகு, நோய்க்குறிகள்,மனநிலை அனைத்தையும் அனுசரித்தே மருந்துகள் தேர்வு செய்து கொடுக்கப்படுகின்றன.

ஹோமியோபதி மருத்துவத்தின் பலன்கள் :

ஹோமியோ மருத்துவம் மென்மையானது, விரைவாகவும், நிரந்தரமாகவும் குணமளிக்கக்கூடியது, பக்கவிளைவுகள் அற்றது. பாதுகாப்பானது.

கல்லுடைக்கும் மருத்துவமனைகளில் ரூ,10,000 முதல் ரூ,50,000 வரை செலவாகிறது. ஹோமியோபதியில் ரூ. 200 முதல் ரூ.2,000 வரை மட்டுமே செலவாகிறது.

சிறுநீர்க்கற்களின் தன்மை, நோயாளியின் உயிராற்றல், உடல்வாகு, நோயின் நாட்பட்ட தன்மை ஆகியவற்றை பொருத்து சிகிச்சையின் கால அளவு மாறுபடும். சிறுநீர்க்கல்லின் தீவிர வலிக்கு சிகிச்சை பெறும் போது கற்கள் வெளியேறிய பின்பும், ஒரிருநாட்கள் மந்தமான வலி நீடிக்கலாம். 3-4 நாட்கள் தொடர்ந்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. சிறுநீர்க்கல் சிகிச்சைக்குப்பின் தனித்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் நோயாளிக்கு ஓரிரு வேளை மருந்து கொடுத்தால் கற்கள் மீண்டும் உருவாவதை தடுக்கமுடியும்.
Reade more >>